1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:17 IST)

மரணத்திற்கு பின் எஸ்பிபிக்கு பத்ம விபூஷன் விருது: எஸ்பிபி சரண் பெற்றார்!

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்கள் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக காலமான நிலையில் அவருடைய மரணத்திற்கு பின்னர் பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பத்ம விருதுகளை அளித்து வருகிறார் என்பதை பார்த்தோம். அந்த வகையில் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷன் விருதை இன்று அவர் அவரது மகன் எஸ்பிபி எஸ்பிபி சரண் அவர்களிடம் வழங்கினார்
 
எஸ்பிபி சார்பில் எஸ்பிபி சரண் இந்த விருதை பெற்றுக் கொண்டதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லியில் 2வது நாளாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது