புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:06 IST)

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இதெல்லாம் தேவையா? திட்டி தீர்த்த ரசிகர்கள்!

‘மதராச பட்டணம்’ என்ற தரமான படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் எமி ஜாக்சன்.  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவரது நடிப்பு  இந்தப் படத்தில் பலராலும் பேசப்பட்டது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்துவிட்டு தற்போது ஹாலிவுட் பக்கம் தாவியுள்ளார் எமி. 


 
இவர் பாலிவுட் படங்களில் நடித்த போது வாரிசு நடிகர் ஒருவருடன் காதலில் இருந்ததாக கிசு கிசுக்கள் பரவியது.  அதன்பிறகு தொழில் அதிபரான  ஜார்ஜ் பனயியோடோ என்பவை காதலித்துவந்தார். லண்டனில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன் பெரும்பாலும் தனது தாய் நாடான லண்டனில்தான் தனது காதலருடன் அதிக நேரத்தை செலவழிப்பார். சமீபத்தில் காதலருடன் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்தது.


 
ஆனால், அண்மையில்  திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருப்பதாக கூறி  புகைப்படம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது கர்ப்பமாக நேரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு அவரது ரசிகர்கள் உங்கள் உடல் நலத்தையும், குழந்தையின் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.