திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (14:24 IST)

#Pray_For_samuthirakani: டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!!

தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Pray_for_Samuthirakani என்கிற ஹாஷ்டாக் வைரலாகி வருகின்றது.
 
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் சமூக வலைதளங்களில் பொழுதுபோக்குக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டர் பக்கத்தில் யாரோ ஒருவர் சமுத்திரக்கனியின் பெயரைக் குறிப்பிட்டு மீம் போட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து பலரும் சமுத்திரக்கனியின் பெயரைக் குறிப்பிட்டு மீம்ஸ் போடத் தொடங்கியிருக்கிறார்கள்.
 
சமுத்திரக்கனியை பல்வேறு கதாபாத்திரங்களுடன் இணைத்து #Pray_for_Samuthirakani என்கிற ஹாஷ்டாக்குடன் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். சமுத்திரகனி தற்போது இணையவாசிகளின் எண்டர்டெயின்மெண்ட் ஆகியுள்ளார்.