1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (13:48 IST)

பிரதாப் போத்தனின் கடைசி படத்தை தயாரித்தவர் இந்த நடிகை தான்: இரங்கல் செய்தி

prathab pothan
பிரதாப் போத்தனின் கடைசி படத்தை தயாரித்தவர் இந்த நடிகை தான்: இரங்கல் செய்தி
நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
 
இந்த நிலையில் அவரது கடைசி படத்தை தயாரித்தது பிரபல நடிகை ஒருவர் என்பது தெரியவந்துள்ளது 
 
பிரதாப் போத்தன் நடித்த கடைசி திரைப்படம் ’காபி வித் காதல்’. சுந்தர் சி இயக்கிய இந்த படம் இன்னும் வெளிவரவில்லை என்பது விரைவில் வெளிவர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தை தயாரித்தது சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரதாப் போத்தன் நடிப்பது குறித்து அவர் கூறிய போது ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் காபி வித் காதல் படத்தில் அவர் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் பிரதாப் போத்தன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்