1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (08:25 IST)

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது? தியாகராஜனின் முக்கிய அறிவிப்பு..!

பிரசாந்த் நடித்த அந்தகன் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவலை தியாகராஜன் தெரிவித்துள்ளதை அடுத்து விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் அந்தகன்.

இந்த படம் பிரசாந்த்துக்கு ஒரு ரீஎண்ட்ரி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படம்  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படம் வெளியாக வருவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அந்தகன் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி விஜய்யுடன் பிரசாந்த் நடித்த கோட் படம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு முன்பே அந்தகன் படம் வெளியாக உள்ளது என்பதும், பிரசாந்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva