அஜித்துக்கு வில்லன் பிரசன்னா...?
அஜித்துக்கு வில்லன் பிரசன்னா...?
அஜித் படத்தில் அவருக்கு வில்லனாக யார் நடிக்கிறார்கள் என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. பிரசன்னா நடிக்க வாய்ப்புள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.
பொதுவாக அஜித் படம் என்றால் குழப்பம் குறைவாக இருக்கும். யார் நடிக்கிறார்கள் என்பதை அறிவித்துவிட்டு படப்பிடிப்புக்கு போய்க்கொண்டேயிருப்பார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கயிருக்கும் புதிய படம் குறித்து ஆரம்பம் முதலலே குழப்பமான செய்திகள்.
படத்தின் நாயகி காஜல் அகர்வால் என்கிறார்கள். ஆனால் இதுவரை அவர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அதேபோல் வில்லன் யார் என்பதிலும் குழப்பம். பிரசன்னா வில்லனாக நடிப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் அரவிந்த்சாமியை வில்லனாக்கவும் முயற்சிகள் நடப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.