திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (08:11 IST)

பிகினி உடையில் பிரகதி - கடுங்கோபத்தில் பின்தொடர்வதை நிறுத்திய ரசிகர்கள்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.

அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் வதந்திகள் வெளியானது.

இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், பிகினி உடையில் பீச்சில் விளையாடும் கவர்ச்சி புகைத்ததை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி வைத்துள்ளார். இதனை பார்த்த இணையவாசி ஒருவர்,  " இன்று முதல் பின் தொடர்வதை நிறுத்துகிறேன், நாங்க பார்த்த பிரகதி இப்படி இல்லையே, பாவாடை சட்டை மல்லிகைபூ நெற்றியில் பொட்டு இது தான் வாய் நெறைய புன்னகை... இப்ப நீங்க அமேரிக்காவுல இருக்கிங்கல அதான்..." என்று ஆதங்கப்பட்டு கமெண்ட் செய்துள்ளார்.

ஆனால், பிரகதி இடத்திற்கு தகுந்தாற்போல் அந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்கிறார். தமிழ் நாட்டிற்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வந்து பிகினி அணிந்து பாடவில்லை என்பதை அவரது ரசிகர்கள் உணரவேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

started the hike with clear skies and ended with ash rain and orange hues ☄️ #nofilter

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on