1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (08:32 IST)

தன்னுடைய உதவி இயக்குனரின் படத்தில் ஹீரோவான ப்ரதீப் ரங்கநாதன்!

கோமாளி படத்தின் மூலம் தன்னை ஒரு வணிக இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு க்ரீத்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகவாகவுள்ளார்.  இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் நடித்த லவ் டுடே திரைப்படம் தெலுங்கிலும் டப் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரதீப்பிடம் உதவி இயக்குனராக இருந்த கீர்த்தீஸ்வரன் என்பவர்தான் இயக்குகிறாராம்.