திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 மார்ச் 2018 (17:44 IST)

சல்மான்கான் எனது நெருங்கிய நண்பர்- பிரபுதேவா பேட்டி

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் தனது நெருங்கிய நண்பர் என நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
 
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதனால் அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பிரபுதேவா இயக்க சல்மான்கான் நடித்தார். அங்கேயும் அந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
 
இதனையடுத்து, மீண்டும் சல்மான்கானுடன் பிரபுதேவா இணைவது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
சல்மான்கானுடன் பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். அவரது தபாங்-3 படத்தை இயக்கவுள்ளேன். முதலில் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம், பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர் கடின உழைப்பாளி, அன்பானவர். அவர் ரஜினி போன்றவர்.
 
திரையுலகத்தில் சல்மான்கான் போல் ஒரு மனிதரை பார்பது அரிது. அவர் யாரையும் கவர வேண்டும் என முயற்சி செய்யமாட்டார். ஆனால், எல்லோர்க்கும் அவரை பிடித்து விடும் என கூறியுள்ளார்.