வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:10 IST)

பிரபுதேவா 54வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! – நாளை வெளியாகிறது!

பிரபுதேவாவின் 54வது படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பிறகு நடிகராக பல படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாம் தமிழ், இந்தி படங்களை இயக்கியும் வருபவர் பிரபுதேவா. தற்போது தொடர்ந்து படங்களில் பிரபுதேவா நடித்து வரும் நிலையில் இவரது 54வது படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குகிறார்.

இந்த படத்தில் இவருடன் ரைசா வில்சன், வரலக்‌ஷ்மி சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர், இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.