திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (14:02 IST)

அழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன்!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.
 
அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இயக்குனர் விஜயகுமார் பிரபுசாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு பிரபு சாலமனுக்கு கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப்போய் இந்த படத்தில் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார் .  
 
இதில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன் நடிக்கிறார் .