என் பொண்ணு அப்படி பண்றது எனக்கு பிடிக்கல - TikTok'ஆல் இயக்குனர் வேதனை!

Papiksha Joseph| Last Updated: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:11 IST)

இந்திய சீனா எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே எழுந்து வரும் பிரச்சனையால் சீனா நாட்டைச் சேர்ந்த டிக்டாக், ஹலோ, ஷேர் ஷாட், பைட் டேன்ஸ் போன்ற 50க்கும் மேற்பட்டமொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்துவிட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை TikTok செயலிக்கு அடிமையான பலர் உள்ளனர்.இதன் மூலம் பிரபலமான பலரும் சினிமாவில் முயற்சிக்க துவங்கினர். அந்த அளவிற்கு TikTok மோகம் மக்களிடையே பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் கயல் , கும்கி , மைனா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமோன் பேட்டி ஒன்றில் பேசினார்.

அப்போது அவரது மகள் ஹேசல் ஷைனி டிக்டாக்கில் பிரபலமானதை குறித்து கேள்வி கேட்டதற்கு, " என் மகள் அப்படி செய்வது எனக்கு ஒரு அப்பாவாக பிடிக்கவில்லை. இதெல்லாம் வேண்டாம் விட்டுவிடுமா என்று கூறினேன். இருந்தும் அவர் இவ்வளவு பிரபலமாவார்கள் என்று அவரே நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :