முதல் முறையாக பிரபுதேவாவோடு இணையும் விஜய் சேதுபதி.. வுல்ப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் நடிப்பும் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் இப்போது அவரின் 60 ஆவது படமாக வுல்ஃப் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வினோ வெங்கடேஷ் இயக்குகிறார். படத்தில் பிரபுதேவாவோடு வசிஷ்டா என் சிம்ஹா, ராய் லட்சுமி, அஞ்சு குரியன், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் ஹிப்னாடிக் திரில்லர் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி இணைவதாக இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ப்ரமோ ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.