1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (15:58 IST)

பிரபாஸின் #ProjectK பட புதிய போஸ்டர் ரிலீஸ்.....ரசிகர்கள் மகிழ்ச்சி

PROJECT  K
‘புராஜக்ட் கே’ படத்தின் புதிய  போஸ்டரை தயாரிப்பு நிறுவனம்  வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பான் இந்திய ஸ்டாராக அறியப்படும் இவரது அடுத்த படம் புராஜக்ட் கே.

மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும்   நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், புராஜக்ட் கே படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள  நிலையில், நடிகர் பிரபாஸ் இப்படத்தின் ஷூட்டிற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இன்று இப்படத்தைத் தயாரித்து வரும் வைஜெயந்தி நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’எல்லா நல்லவைகளும்  நடக்க நேரம் எடுத்துக் கொள்ளும்’’ என்று காலையில் பதிவிட்டிருந்தது. அதன்படி, இன்று புராஜக்ட் கே படத்தின் ஹீரோ பிரபாஸின் புதிய போஸ்டரை அப்லோடு செய்ய தாமதமானதாக தெரிகிறது.

நேற்று, புராஜக்ட் கே பட ஹீ ரோயின் நடிகை தீபிகா படுகோனின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்த நிலையில், இன்று பிரபாஸின் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

பிரபாஸின் புதிய போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ்  வீடியோ அமெரிக்காவில் உள்ள காமிக் கான்  மற்றும் பிரபலமான டைம்ஸ் ஸ்கொயரில் ஆகிய இடங்களில்  ஜூலை 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி இந்த ஜிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.