செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (21:22 IST)

''பாகுபலி ''படத்தை ஓவர்டேக் செய்ய பிரபாஸ் திட்டம்!

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில்  உருவாகிவரும் படம் ஆதி புரூஸ். இப்படத்தை ஒம் ராவன் இயக்கி வருகிறார்.ராமாயணத்தைமையாக வைத்து உருவாகிவரும் படம் ஆதி புரூ. இப்படத்தில் கீர்ட்தி சனோன் சீதை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.  சாயிப் அலிகான் ராவணன் வேடத்தில் நடிக்கிறார்.

ரூ. 500 கோடி பட்ஜெடில் உருவாகியுள்ள இப்படம்  வரும் இப்படத்தை ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தைப் போன்று  பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்படம் வெளியான பின் இதன்  2 ஆம் பாகத்தையும் பிரமாண்டமாக எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி இப்படம் வெளியாகும்  என கூறப்பட்ட நிலையில் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிபுரூஸ் இரண்டாம் பாகத்தில் நடிக்க பிரபாஸ் இயக்கு நர் ஓம் ராவத்திடம் சம்மதம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.