1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (07:59 IST)

என்ன மேட்மேக்ஸ் வாட அடிக்குது… எப்படி இருக்கு பிரபாஸின் கல்கி டிரைலர்?

கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸானது. பிரம்மாண்ட காட்சிகளோடு தொடங்கும் டிரைலரில் ஒரு பெரும் அழிவுக்குப் பிந்தைய வறட்சியான உலகமும், எல்லா வளங்களும் இருக்கும் காம்ப்ளக்ஸ் என்ற உலகும் காட்டப்படுகின்றன. பல் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மனித உயிர் பிறக்கவுள்ள நிலையில் அதை காப்பாற்றுவதற்கான மிஷனில் பிரபாஸை இறக்கி விடுகிறார் அமிதாப் பச்சன். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதைக் காட்டும் விதமாக டிரைலர் கட் செய்யப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட கமல்ஹாசன் டிரைலரின் இறுதியில் சில வினாடிகள் மட்டுமே வந்து போகிறார்.