1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Prabhas kalki movie record breaking reservation in america

அமெரிக்காவில் முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா?... சாதனை படைத்த பிரபாஸின் கல்கி!

பிரபாஸ்
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தின் உலகளாவிய பிஸ்னஸ் தற்போது நடந்து வரும் நிலையில் வட அமெரிக்காவில் இந்த படம் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. முன்பதிவில் மட்டும் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய்க்கு மேல். இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் இவ்வளவு பெரிய தொகையை ரிலீஸுக்கு முன்னர் வசூலித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?