1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (11:56 IST)

பிரபாஸ் நடித்த ‘சலார்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஷாருக்கானுடன் நேருக்கு நேர் மோதல்..!

பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படம்  டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே டிசம்பர் 22ஆம் தேதி தான் ஷாருக்கான் நடித்த டங்க்கி என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரு படங்களும் நேருக்கு நேர் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும் இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ’கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார்.

இந்தப் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டவுடன், படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் ட்விட்டரில் இதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran