ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (15:43 IST)

பிரபாஸ் 21… தயாரிக்கும் புராதன நிறுவனம் – இயக்குனர் யார் தெரியுமா ?

பிரபாஸ்

பிரபல நடிகர் பிரபாஸ் அவரது 21 ஆவது படத்தை இயக்குனர் அஷ்வின் நாக் இயக்க உள்ளார்.

பாகுபலியின் வெற்றிக்குப் பின்னர் பிரபாஸ் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக மாறினார். இதனால் அவர் நடித்த சாஹோ திரைப்படம் பல மொழிகளில் உருவாக்கப்பட்டது. ஏராளமாக செலவும் செய்யப்பட்டது. ஆனால் அந்த படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை. இந்நிலையில் அவர் தற்போது காதல் படம் ஒன்றில் நடித்து வருகிறது. அந்த படத்துக்கு பிரபாஸ் 20 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து அவர் நடிக்கும் பிரபாஸ் 21 திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் பழமையான நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மாலா மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தை மகாநடி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க இருக்கிறார். விரைவில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.