வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (16:08 IST)

தொழிலதிபரின் பேத்தியை திருமணம் செய்யும் பிரபாஸ்?

நடிகர் பிரபாஸ், மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபரின் பேத்தியை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்காக 5 வருடம் கடுமையாக உழைத்த நடிகர் பிரபாஸுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க பெண் தேடுகிறார்கள்.
 
ஆனால், அவருக்கும் நடிகை அனுஷ்காவிற்கும் இடையே காதல் உருவாகியிருப்பதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை, பிரபாஸ் மணந்து கொள்ள இருப்பதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.  அதேபோல், ராசி சிமெண்ட் சேர்மர் பூபதிராஜாவின் பேத்திக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக மும்பை வட்டாரத்தில் பேசப்பட்டது. அந்த பெண்ணைத்தான் பிரபாஸுற்கு பேசி முடித்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. 
 
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் எனத் தெரிகிறது.