விஜய் சேதுபதி நடித்துவரும் முதல் இந்திப் படத்தின் போஸ்டர்
விஜய் சேதுபதி நடித்துவரும் முதல் இந்திப் படத்தின் போஸ்டர் இன்று ரிலீசாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாநகரம் என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார் . இப்படத்திற்கு மும்பைகார் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி கேரக்டரின் லுக் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஸ்டைலிஷாக இருப்பதாக ரசிகர்கள்கூறுகின்றனர். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.
சந்தோஷ் சிவன் நீண்ட நாட்கள் கழித்து இயக்கிவரும் இப்படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.