பிரபல’ நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி’ காலமானார்

krishnamurthy
sinoj kiyan| Last Modified திங்கள், 7 அக்டோபர் 2019 (09:45 IST)
தேனி மாவட்டம் குமுளியில் நடந்த படபிடிப்பின் போது, பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி  மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு சினிமாதுறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
வைகைப் புயல் வடிவேலுவுடன் அதிகளவிலான காமெடிப் படங்களிலும், இயக்குநர் பாலா இயக்கிய நான் கடவுள் உள்ளிட்ட பல
படங்களிலும் நடித்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. 
 
தேனி மாவட்டம் குமுளியில், இன்று அதிகாலை படப்பிடிப்பின்போது கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு அவரது குடும்பதினர், நண்பர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :