1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 31 டிசம்பர் 2022 (14:47 IST)

பிரபல நடிகை பூர்ணா கர்ப்பம்.. குவியும் வாழ்த்துகள்

poorna -shaneeth
பிரபல நடிகை பூர்ணா கர்ப்பமாகி உள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரபலம மலையாள நடிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஷாம்னா காசிம். இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, காப்பான், ஸ்ரீமஹாலட்சுமி, அவுனு, சீமா டபகை மற்றும் அகண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அசின் போன்ற முகத்தோற்றம் கொண்ட  இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழிகளில்  நடித்து வந்த நடிகை பூர்ணா, கடந்த அக்டோபர் மாதம்  ஜேபிஎஸ் குழும நிறுவனத்தில் தலைமை  நிர்வாக அதிகாரி ஷானித்தை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.