1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 8 ஜூலை 2023 (14:26 IST)

பிரபல நடிகர் நவ்தீப் கால் உடைந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி

Navdeep
பிரபல தெலுங்கு நடிகர் நவ்தீப்  விபத்தி சிக்கி கால் உடைந்ததாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்  நவ்தீப். இவர்  கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெய் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமனானார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆர்யா தயாரித்து  நடித்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த நிலையில்,  நடிகர் நவ்தீப் ஒரு விபத்தில் சிக்கி தன் காலை உடைத்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து அவரிடம் விசாரிக்க சென்ற நடிகை தேஜஸ்வி அங்கு நவ்தீப் முறிவுக்குச் சிகிச்சை எடுத்துக் காலில் கட்டுப்போட்டு, ஊன்றுகோலுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டி சினிமா நட்சத்திரங்களும்  ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.