செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (19:50 IST)

பிரபல நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்!

Actor Junior Mehmood
புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் இன்று காலமானார்.

இந்தி சினிமாவின் பிரபல காமெடி நடிகரான மெஹமூத் அலியின் மகன்  நடிகர் ஜூனியர் மெஹமூத்(67). இவரது இயற்பெயர்  நயீம் சயீத். சினிமா ரசிகர்கள் இவரை ஜூனியர் மெஹமூத் என்று தந்தையின் பெயரில் அழைத்து வந்தன்ர்.

இவர் 1967 ஆம் ஆண்டு வெளியான நவுனிகல் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், இந்தி,மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் 265 படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்று நோயின் 4 ஆம் நிலையில், உள்ளதாக மருத்துவர் கூறியுள்ளனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் கூறி வருகின்றனர்.