செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:14 IST)

உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - ஒத்த காலில் நிற்கும் 7 வகுப்பு மாணவன்!

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவை கண்டு தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ். 
 
கல்கத்தாவை சேர்ந்த பூனம் பாஜ்வா ஹோம்லி அழகியாக தமிழ் சினிமாவில் நுழைந்து சேவல்  படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
 
முதல் படமே மக்களிடையே நல்ல ரீச் அடைந்தது. அதை தொடர்ந்து  தெனாவட்டு , கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2, ஆம்பள , குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 
 
இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தார். இந்நிலையில் தற்போது தனக்கு 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் காதல் ப்ரொபோஸ் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார். 
 
அந்த பதிவியில், "எனக்கு உங்களை மிகவும் பிடிச்சிருக்கு. உங்களை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், உங்களை காட்டிலும் எனக்கு வயசு மிகவும் குறைவு. 
 
எனவே எனக்கு 21 வயது ஆகும் வரை காத்திருங்கள். இந்த மாட்டன் உலகத்தில் வயசு வித்தியாசம் ஒன்றில் பிரச்சனை இல்லை. 
 
நான் என் அம்மாவிடம் கூட சொல்லிவிட்டேன் தொடர்ந்து நீங்கள் படங்களில் கிளாமராக நடிக்கலாம். என்றெல்லாம் அந்த மெசேஜில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். 7 ம் வகுப்பு படிக்கும் பயனுக்கு இப்படி இரு ஆசையா? என எல்லோரும் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.