1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:01 IST)

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நாளை ஆரம்பம்!

rajinilyca
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் அடுத்த படத்தின் பூஜை நடக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக கல்கியின் பொன்னியின் செல்வன்   நாவலை சினிமாக்கும் முயற்சிகள் நடந்து வந்த நிலையில், மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் அதை படமாக தயாரிக்க உதவியவர் லைகாவின் சுபாஸ்கரன்.

சமீபத்தில், மணிரத்னம், இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் நடிப்பில், பொ.செ-1 பாகம் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது.

இப்படத்தின் வெற்றியை அடுத்து, படக்குழுவினருக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரனுக்கு அவர் நாளை ( நவம்பர் 5 ஆம் தேதி)  விருந்து வைக்க உள்ளார்.இதே நாளில், இதே இடத்தில்,  ரஜினி பட பூஜையும் தொடங்கவுள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு, இது குறித்த ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளதால்,  நாளை (நவம்பர் 5ஆம் தேதி) சென்னையில்  உள்ள லீலா பேலஸில் ரஜினின் அடுத்த பட பூஜையும் தொடங்கப்படவுள்ளது.

ஜெயிலர் படம் முடியும் முன்னரே ரஜியின் அடுத்த படத்தின் பூஜை தொடங்கவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Sinoj