செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (17:06 IST)

மீண்டும் தமிழுக்கு வரும் பூ பார்வதி… எதிர்ப்பு உருவாகுமா?

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பூ பார்வதி தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழில் பூ மற்றும் மரியான் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி திருவொத்து. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் ஒரு பெண்ணிய நடிகையாக தன்னை முன்னிறுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வைரமுத்துவுக்கு கேரளாவில் விருது வழங்கப்பட்டதை அடுத்து அவர் அதற்கான எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்தார். அதையடுத்து பலரும் குரல் கொடுக்க வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட விருது மறு பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வைரமுத்துவுக்கு நெருக்கமானவர்கள் பார்வதி மீது கோபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் நடிகர் சித்தார்த் நடித்து தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க பார்வதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என சொல்லப்படும் நிலையில் அந்த படத்துக்கு எதிர்ப்புகள் எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.