கனடாவில் பொன்னியின் செல்வன் ரிலீஸில் சிக்கல்… வருத்தத்தில் தமிழ் மக்கள்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் உலகமெங்கும் ரிலீஸாக உள்ளது.
தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் கனடாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் வடிவம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் சில தமிழ் படங்கள் ரிலீஸான போது அங்கு திரையரங்குகளில் சில களேபரங்கள் நடந்துள்ளது என்பதால் தமிழ் தவிர மற்ற மொழிகளில் மட்டும் ரிலீஸ் ஆகிறதாம். இதனால் அங்கு பெரியளவில் அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.