1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2022 (18:17 IST)

’பொன்னியின் செல்வன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்: இணையத்தில் வைரல்

Ponniyin Selvan
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது
 
ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை இளங்கோ லட்சுமணன் என்பவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பொன்னி நதி என்று தொடங்கும் இந்த பாடல் இணையதளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுபாஷ்கரன் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் இந்திய திரையுலகிற்கு பெருமை தரும் படமாக இருக்கும் என்றும் குறிப்பிடத்தக்கது