வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (17:05 IST)

பிரபுதேவாவின் முதல் போலீஸ் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகர் பிரபுதேவா முதல் முதலாக போலீஸ் வேடத்தில் நடித்த பொன்மாணிக்கவேல் திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் என்றும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக பொன்மாணிக்கவேல் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பொங்கல் தினத்தில் ரஜினியின் தர்பார் படம் திரையிடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
முகில் செல்லப்பன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டி இமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலரை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் பிரபு தேவாவிற்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது