செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:33 IST)

பிசாசு 2 டீசர் ரிலீஸை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிசாசு 2’திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் டீசர் ரிலீஸை முன்னிட்டு தற்போது புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வெளியாகியுள்ளது.