ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 ஜனவரி 2019 (10:41 IST)

'பேட்ட' படத்தின் பஞ்ச் வசனங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் இன்று வெளியாகி ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் படம் பார்த்த ஒருசிலர் டுவிட்டரில் இந்த படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனங்களை பதிவு செய்துள்ளனர். அவற்றை தற்போது பார்போம்

*மறுபடியும் என்னை நீ தொட்டிருக்கக்கூடாது. என்னைத் தொட்டவனை நான் விட்டதில்லை

*உலகத்துல எந்த மூலைக்குப்போனாலும் அங்கே உதவ ஒரு தமிழன் இருப்பானே, அவன்தான் இவன்

*பிரச்சனை வேணாம், இத்தனை நாளா ஒதுங்கி இருந்தோம், அப்டியே இருந்துடுவோமே? ஒதுங்கி இல்லை, பதுங்கி இருந்தோம்

* நல்லவனா இரு,ரொம்ப நல்லவனா இருக்காதே

*உன்னையும் , அவனையும் மன்னிச்சிட்டேன், ஆனா மன்னிச்சிட்டே இருக்க மாட்டேன்

*ஒருத்தன் உட்கார்ந்திருக்கற ஸ்டைலை வெச்சே அவன் எப்பேற்பட்ட ஆள்னு கண்டுபிடிச்சிடலாம், இவன் ரத்தம் பார்த்தவன்

*நல்லா இல்லைன்னா கேள்வி கேட்கனும், இல்ல நாமே இறங்கி மாத்தனும்,

*புதுசா வர்றவனை மிரட்றதும் ,பயம் காட்றதும் இங்கேதான் நடக்குது.அன்பா வாழ்த்தி வரவேற்கனும்

மேற்கண்ட வசனங்களில் மறைமுகமாக அரசியலும் இருப்பதால் இந்த வசனங்கள் வரும் காட்சிகளின்போது ரசிகர்களின் விசில் சப்தம் விண்ணை பிளந்தது என்பதை கூறவும் வேண்டுமா?