1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (10:53 IST)

ராணுவ உடையில் கிளுகிளுப்பு! காட்மேனை தொடர்ந்து சிக்கிய அடுத்த வெப் சிரிஸ்!

தமிழில் சர்ச்சைக்குரிய வகையில் உள்ளதாக காட்மேன் வெப்சிரிஸ் தடை செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு இணைய தொடருக்கு எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் போன்று வெப் சிரீஸ்க்கு சென்சார் சான்றிதழ் அவசியம் இல்லை என்பதால் பல இளம் இயக்குனர்கள் இணைய தொடர்கள் உருவாக்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அதேசமயம் இணைய தொடர்களில் வன்முறை காட்சிகள், பாலியல் உறவு காட்சிகள் அதிகமாக இருப்பதாக பலர் இணைய தொடருக்கும் சென்சார் வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் வெளியாகவிருந்த காட்மேன் என்னும் வெப்சிரிஸில் குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரித்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, அதை தொடர்ந்து அந்த தொடரும் வெளியாகாமல் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய ராணுவத்தை கேவலப்படுத்தும் விதமாக அல்ட்பாலாஜி ஓடிடியில் ட்ரிபிள் எக்ஸ் 2 என்ற தொடரில் காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அந்த தொடரில் ராணுவ வீரர் ஒருவரை தொடர்து மது அடிமையாக காட்டுவதாகவும், அவரது மனைவி தனது கணவரின் ராணுவ உடுப்பை அணிந்து கொண்டு வேறொரு ஆணுடன் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகளை அமைத்திருப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் அல்ட்பாலாஜி போன்ற தளங்கள் ஆபாசமான தொடர்கள் பலவற்றை வெளியிட்டு வருவதாகவும் அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும்பலர் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.