1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:22 IST)

மக்கள் ஓவியா பக்கம் என தெரிந்தும் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடும் காஜல் - ப்ரொமோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் வந்த மூன்று போட்டியாளர்களில் காஜல் பசுபதியும் ஒருவர். இவர் நடந்துகொள்வதும், பேச்சும்  சற்று வித்தியாசமாக உள்ளது. இவர் பேசுவதே புரியவில்லை என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

 
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் காஜல், ஹரிஷ் கல்யாணிடம், ஓவியாவுக்கு ஆதரவாக பேசினால்தான் வெற்றி பெறமுடியும். பில்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருமுறை பகைத்து கொண்டாலும், வெளியே போனால் பச்சைபச்சையாக  திட்டுவார்கள். நான் வந்ததிலிருந்தே பகைத்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார் காஜல். பார்ப்பேன் ஒருகட்டத்தில் நான்  ஓடிவிடுவேன் என ஹரிஷிடம் கூறினார்.
 
தற்போது வெளிவந்துள்ள புரொமோவில் சினேகன் அவரை பற்றி வையாபுரியிடம் சொல்லும் போது, மக்கள் ஓவியா பக்கம் என  தெரிந்தும் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடுகிறார் என சொல்கிறார். இது காஜலை குறிப்பிடுவது போல் இருந்தது. அதே போல ரைசா ஆரவ்விடம் அவங்க காமெடி பீஸ் என சொல்கிறார். ஒன்றும் புரியா நிலையில் நடப்பது என்ன என்பது இன்றைய நிகழ்ச்சியில்  தெரிந்துவிடும்.