மறுபடியுமா? மேக்கப் வீடியோ வெளியிட்டு பதற வைத்த ரைசா வில்சன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ஆலிஸ் விஷ்ணு விஷாலுடன் FIR போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சிக்கு எப்போதும் தாராளம் காட்டும் ரைசா அண்மையில் அழகு சிகிச்சை செய்து முகம் வீங்கி புகைப்படம் வெளியிட்டு சம்மந்தப்பட்ட அழகு கலைஞர் மீது புகார் அளித்தார். அதற்கு ரைசா மேக்கப் போட்ட பின் ஆல்கஹால் எடுத்தால் அப்படி ஆனதாக விளக்கம் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஹைகிளாஸ் ரேஞ்சுக்கு மேக்கப் போடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் மறுபடியுமா? என ஷாக் ஆகிவிட்டனர்.