திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (12:50 IST)

பவன் கல்யாண் படம் ரீ ரிலீஸான தியேட்டரில் தீ வைத்த ரசிகர்கள்!

Theater Fire
ஆந்திராவில் பிரபல நடிகர் பவன் கல்யாணின் படம் ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் திரையரங்கில் ரசிகர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தெலுங்கு சினிமாவில் பிரபலமாக உள்ள ஸ்டார் நடிகர்களில் முக்கியமானவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவரது நடிப்பில் OG என்ற திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது. இடைப்பட்ட காலத்தில் இவரது பழைய படங்கள் சிலவும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பவன் கல்யாண், தமன்னா நடித்த ‘கேமராமேன் கங்கா டூ ராம்பாபு’ என்ற திரைப்படம் நேற்று ரீரிலீஸ் ஆனது. ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் உள்ள திரையரங்கு ஒன்றிலும் படம் வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்கள் பேப்பர்களை கிழித்து போட்டு ஆரவரம் செய்தனர்.

அதில் சிலர் தியேட்டருக்குள்ளேயே கிழித்து போட்ட பேப்பர்களுக்கு தீ வைத்து தூக்கி போட்டனர். இதனால் திரையரங்கிற்குள் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. திரையரங்கில் புகை சூழ்ந்த நிலையில் தீயை அணைத்து ரசிகர்களை வெளியேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K