வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:15 IST)

பவன் கல்யாணின் பீமா நாயக் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டாரும் பிரபல அரசியல் கட்சித் தலைவருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும்  ‘பீமா நாயக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பவன் கல்யாண் – சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீமா நாயக். இப்படத்தை இயக்குநர் சாகர் கே.சந்திரா இயக்கியுள்ளார்.   இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை வம்சி மற்றும் ராதா கிருஷ்ணா இணைந்து தயாரித்துள்ளனர்.

திரிவிக்ரம் திரைக்கதை எழுதியுள்ள இப்படம் கொரொனா 3 வது அலையின் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இ ந் நிலையில், இப்படம் வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.