1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (13:36 IST)

பவன் கல்யாண் நடிப்பில் சாஹோ இயக்குனரின் அடுத்த படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் அரசியலுக்கு சென்று கட்சி ஆரம்பித்ததால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு அவர்  3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடித்த வக்கீல் சாப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து சமீபத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் அவர் நடித்த ப்ரோ என்ற படம் சரியாகப் போகவில்லை. இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி இப்போது வெளியாகியுள்ளது.

சாஹோ படத்தின் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் ஓஜி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பவன் கல்யாணோடு அர்ஜுன் தாஸ் மற்றும் இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை டி வி வி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைக்கிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.