புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (19:17 IST)

’பட்டாஸ்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் வரும் 16ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது
 
’பட்டாஸ்’ படத்தின் டிரைலர் எடிட்டிங் பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதாக சற்று முன்னர் எடிட்டர் ரூபன் தனது டுவிட்டரில் கூறிய நிலையில் தற்போது நடிகர் தனுஷ் ’பட்டாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை 10.31 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது 
 
மேலும் நாளை இணையதளங்களில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனாலும் தர்பார் படம் ரிலீசாகும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் தர்பார் திரையிடப்படும் திரையரங்குகளிலும் ’பட்டாஸ்’ படத்தின் டிரைலர் திரையிடப்படும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. எனவே தர்பார் படத்தை பார்க்கச் செல்லும் தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு பட்டாசு பட விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
துரை செந்தில்குமார் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது