ஒரு ஆண்டு கழித்து ‘பத்து தல’ இயக்குனருக்கு அடுத்த வாய்ப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
சிம்பு நடித்த பத்து தல என்ற திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணாவுக்கு ஒரு ஆண்டு கழித்து தற்போது அடுத்த படத்தின் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிம்பு நடிப்பில் கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ‘பத்து தல’. இந்த படம் உலகம் முழுவதும் 55 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி பெற்றதாக கூறப்பட்டாலும் இந்த படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவுக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒரு சில முன்னணி நடிகர்களிடம் அவர் கதை கூறிய போதிலும் அவருக்கு எந்த நடிகரும் வாய்ப்பு கொடுக்காத நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நயன்தாரா நடித்த வரும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ உள்பட ஒரு சில படங்களை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் கிருஷ்ணா இயக்க இருக்கும் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இது குறித்து அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளதை அடுத்து தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோ இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran