ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (09:42 IST)

மன்னிப்பு கேட்பாரா ஏ.ஆர். முருகதாஸ்?

இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்தவர் பிரவீன்காந்த். அவர் ‘ரட்சகன்’ படத்தை எடுத்தபோது, அவரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஏ.ஆர்.முருகதாஸ். 


 

சமீபத்தில், தேசிய விருது கமிட்டி குறித்து விமர்சனம் செய்திருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில், முருகதாஸைத் திட்டி ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் பிரவீன்காந்த்.
 
“என் உதவியாளரான எஸ்.ஜே.சூர்யா மூலம் அஜீத்திடம் கதை சொன்னீர்கள். நான் இயக்குவதாக இருந்த படத்தை, சில சூழ்ச்சிகளால் கைப்பற்றினீர்கள். என் உதவியாளர்தானே இயக்குகிறார் என்ற பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். அந்த பெருந்தன்மை, என் குரு ப்ரியதர்ஷன் எனக்கு கற்றுக் கொடுத்தது.
 
‘தீனா’ படத்தில் அஜீத்துக்கு ‘தல’ என்று பட்டம் கொடுத்தீர்களே… அது என்னுடைய உதவியாளரான மோகன் சொன்ன விஷயம். ஆனால், அதற்கான பெயரை நீங்கள்தான் அனுபவிக்கிறீர்கள். நீங்கள் எடுத்த ‘ரமணா’, ‘கஜினி’, ‘கத்தி’ படங்கள் முதற்கொண்டு யாருடைய கதை என ஊருக்கே தெரியும். அப்படிப்பட்ட நீங்கள், ப்ரியதர்ஷனை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. கேட்பாரா ஏ.ஆர்.முருகதாஸ்?