செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (11:14 IST)

ஒரு வழியா விருது வாங்கிய ஒத்த செருப்பு! – பார்த்திபன் ஹேப்பி அண்ணாச்சி!

இயக்குனர் பார்த்திபன் இயக்கி கடந்த ஆண்டு வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு மத்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை முயற்சிப்பவர் இயக்குனர் பார்த்திபன். கடந்த ஆண்டு இவர் இயக்கி, நடித்து வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் பலரது பாராட்டுகளை பெற்றாலும், வசூல்ரீதியாக சோபிக்கவில்லை. இந்நிலையில் பல்வேறு ஊடக, தொலைக்காட்சி விருதுகளிலும் கூட ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு விருது வழங்காதது குறித்து விழா மேடையிலேயே பார்த்திபன் தனது ஆதங்கங்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது ஆதங்கத்திற்கு ஆறுதல் தரும் வகையில் மத்திய அரசின் விருதுகள் பட்டியலில் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து பலரும் பார்த்திபனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வெளியான “ஹவுஸ் ஓனர்” படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.