செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (14:44 IST)

பார்த்திபன் நடிக்கும் டீன்ஸ் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்கிறார். படத்தில் ஒரு கேமியோ ரோலில் தானும் நடித்துள்ளார். படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றது. அதையடுத்து படம் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 படத்தோடு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் ரன்னிங் ரைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 127 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் ஓடக்கூடிய அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.