செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (11:49 IST)

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன்..!

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன் என நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் அறிவித்துள்ளார் 
 
நடிகர் பார்த்திபன் நடித்த இயக்கிய ‘டீன்ஸ்’ என்ற திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகளில் பார்த்திபன் பிசியாக உள்ளார். 
 
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைதளத்தில் ‘டீன்ஸ்’ படத்தின் டிக்கெட் விலை இந்தியா மதிப்பில் ரூபாய் 100 மட்டுமே என்று அறிவித்துள்ளார். 
 
சென்னை உள்பட பல பெருநகரங்களில் 180 முதல் 200 ரூபாய்க்கும் அதிகமாக டிக்கெட் விலை இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு அவர் தாமாகவே முன்வந்து 100 ரூபாய் டிக்கெட் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, ஆனால் ‘டீன்ஸ்’ படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 100 ரூபாய் மட்டுமே. இதில் எனக்கு நட்டம் இல்லை, வசதி குறைந்தவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே சில படங்களுக்கு டிக்கெட் விலை குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பார்த்திபன் தனது படத்திற்கும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதை அடுத்து பலர் இந்த படத்தை பார்க்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran