1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:59 IST)

ஒரே நேரத்தில் இரண்டு படம்: பார்த்திபன் அறிவிப்பு!

நடிகர் இயக்குனர் பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த படத்திற்கு விருதுகளும் வாழ்த்துக்கலும் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது அவர் ‘இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘இரவின் நிழல்’ தவிர இன்னொரு படத்தையும் தான் இயக்கி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சற்று நகைச்சுவை தூக்கலாக இருக்கும் என்றும் இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டே வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
தனது இரண்டாவது படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் பார்த்திபன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் மாற்றி மாற்றி இயக்க திட்டமிட்டுள்ள பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது