வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (09:35 IST)

மண்ணைக் கவ்விய இந்தியன் 2… மூன்றாம் பாகத்தை ஓடிடியில் வெளியிட திட்டமா?

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட ரசிகர்களுக்கு விருப்பமான ஆளுமைகள் இருந்த இந்தியன் 2 இந்தளவுக்கு மோசமாக உருவாக்கப்பட்டிருக்குமா எனும் அளவுக்குப் படம் இருந்தது. சமூகவலைதளங்களில் படம் பெரியளவில் கேலிகளுக்கு ஆளானது.

படத்தின் பலக் காட்சிகளை பகிர்ந்து அதை ரசிகர்கள் ட்ரோல் செய்யுமளவுக்கு சென்றது. அதனால் தியேட்டர் வசூலில் வீழ்ச்சியை சந்தித்தது. படம் ஓடிடியில் வெளியான போது ட்ரோல்கள் பல மடங்கு அதிகமாகின. இதனால் இந்தியன் 3 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பே இல்லை எனும் நிலைதான் உள்ளது.

மேலும் இந்தியன் 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், இந்தியன் 3 ரிலீஸ் ஆகும்போது அவர்கள் குறைவான விலைக்குக் கேட்க வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது. இதனால் இப்போது இந்தியன் 3 திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்துவிடலாமா என்ற முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.