1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 6 மார்ச் 2021 (13:26 IST)

ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் சன் நெக்ஸ்ட்டுக்கு வந்த யோகிபாபு படம்!

ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் சன் நெக்ஸ்ட்டுக்கு வந்த யோகிபாபு படம்!
யோகி பாபு நடித்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகிய ஒரே மாதத்தில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டென்னிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், சுனைனா நடித்த திரைப்படம் ட்ரிப். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரு திரைப்படம் ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ரிலீசான 16 நாட்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின்னர் மூன்று மாதங்களுக்கு பின்னரே ஓடிடியில் ரிலீசாக வேண்டும் என்ற நிபந்தனையை திரையரங்கு உரிமையாளர்கள் வைத்தனர். இருப்பினும் தற்போது யோகிபாபு படம் ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது