1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (12:01 IST)

க/பெ. ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ ரிலீஸ்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் ஓடிட்யில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் வெளியாக உள்ளது தெரிந்தது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு வருகின்றன. அந்தவகையில் சற்றுமுன் இப்படத்தின் பறவைகளா எனும் பாடல் வெளியாகி படத்தின் மீதான ரசிகர்ளின் கவனத்தை அதிகரிக்க செய்துள்ளது.

விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள க/பெ. ரணசிங்கம் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்க்கவேண்டும் என்றால் ரூ. 199 தொகை செலுத்தி ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.