1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:12 IST)

க பெ ரணசிங்கம் படத்தினை பார்க்க எவ்வளவு கட்டணம் தெரியுமா? இதுக்கு தியேட்டரே பரவாயில்லையே!

விஜய் சேதுபதி நடித்துள்ள க பெ ரணசிங்கம் படத்தினை ஓடிடியில் படம் பார்க்க ரூ 199 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடி வழியாக ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள க\பெ ரணசிங்கம் திரைப்படமும் ஓடிடி மூலமாக வெளியாக உள்ளது.

ஜீ நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள இந்த படத்தை ஒரே சமயத்தில் டிடிஎச் மற்றும் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி அக்டோபர் 2 அன்று ஜீ ப்ளெக்ஸ் சேனல் மூலமாக ஒளிபரப்பப்படவும், ஜீ5 தளத்தில் பார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஜீ ப்ளெக்ஸ் சேனலானது ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டாடா ஸ்கை, டி2எச், டிஷ் டிவி உள்ளிட்ட டிடிஎச்களில் பார்க்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை ஒரு தடவை ஜி பிளக்ஸில் பார்க்க 199 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் தியேட்டர் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.